பெங்களூரு, நவ. 17- கருநாடக பா.ஜனதா புதிய தலைவ ராக விஜயேந்திரா பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவை மூத்த தலைவர்கள் புறக்கணித்த தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கருநாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததை அடுத்து பா.ஜனதா மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் தனது பதவியிலிருந்து விலகிய கடிதத்தை கட்சி மேலி டத்திற்கு அனுப்பினார். 6 மாத கால நீண்ட தாம தத்திற்கு பிறகு கருநாடக பா.ஜனதா தலைவராக எடியூரப்பா மகன் விஜ யேந்திரா கடந்த 10ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் 15ஆம் தேதி (அதா வது நேற்று) கட்சிதலைவ ராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பெங்க ளூரு மல்லேசுவரத் தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பா. ஜனதா மாநில தலைவ ராக விஜயேந் திரா பதவி ஏற்பு விழா 15.11.2023 அன்று நடைபெற்றது. இதில் மேனாள் முத லமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் நடை பெற்ற இந்த விழாவில் விஜயேந்திரா கட்சியின் புதிய தலைவராக பொறுப் பேற்றார். அவரிடம் நளின்குமார் கட்டீல் பொறுப்புகளை ஒப்ப டைத்தார். கட்சி தலை வர் பதவியை ஏற்பதற்கு முன்பு அவர், தனது தந்தை எடி யூரப்பாவின் “காலில் விழுந்து விஜயேந் திரா ஆசி” பெற்றார்.
மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு
கருநாடக பா.ஜனதா தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்த சி.டி.ரவி தலைவர் பதவி கிடைக்காததால் கடும் ஏமாற்றம் அடைந்து உள்ளார். விஜயேந்திரா தலைவ ராக பதவி ஏற்கும் விழாவை புறக்கணிப் பேன் என்றும் அவர் அறிவித்தார். அவரது இந்த கருத்து கட்சியில் அதி ருப்தி இருப்பதை வெளிப் படுத்தியது. அதே போல் மற்றொரு போட்டியா ளர் சட்டமன்ற உறுப்பி னர் அரவிந்த் பெல்லத் ஏமாற்றம் அடைந்துள் ளார்.
இந்த நிலையில் அவர்கள் விஜயேந்திரா பதவி ஏற்பு விழாவை புறக்கணித்தனர். அவர் கள் மட்டுமின்றி மூத்த தலைவர்கள் வி.சோமண்ணா, பசன கவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., டாக்டர் சுதாகர், அரவிந்த் லிம்பா வளி உள்ளிட்டோரும் இந்தவிழாவை புறக் கணித்தனர்.
இது பா.ஜனதாவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.