குழந்தைகள் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
ஜாா்க்கண்ட், செப்.26 ஜாா்க்கண்டில் அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட அறக்கட்டளையின் காப்பகத்தால் குழந்தைகள் சட்டவிரோதமாக விற்கப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரிய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
‘நீங்கள் செய்ய வேண்டிய பணிக்குள் உச்சநீதிமன்றத்தை இழுக்க வேண்டாம்’ என்றும் நீதி பதிகள் கூறி, மனுவை தள்ளுபடி செய்தனா்.
இதுதொடா்பாக தேசிய குழந் தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) கடந்த 2020-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசமைப்புச் சட்டத்தின் 23-ஆவது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஆள்கடத்தலைத் தடை செய்வ தற்கான அடிப்படை உரிமைகளை அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், ஜாா்க்கண்டில் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் அக்கறையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப் பதாகவும் மனுவில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, என். கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் 24.9.2024 அன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் என்சிபிசிஆா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முன்வைத்த வாதத்தில், குழந் தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஜாா்க் கண்டில் உள்ள அனைத்து அறக்கட்டளைகளையும் உச்சநீதி மன்றத்தின் கண்காணிப்பில் விசாரிக்க உத்தரவிட கேட்டுக் கொண்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘குழந்தைகள் ஆணையம் தாக்கல் செய்த மனு முற்றிலும் தவறானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நீங்கள் செய்ய வேண்டிய பணிக்குள் உச்சநீதிமன்றத்தை இழுக்க வேண்டாம். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக் கைகள் குறித்த அறிவுறுத்தல்களை நாங்கள் எப்படி வழங்க முடியும்?
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (சிபிசிஆா்) சட்டம், 2005-இன் கீழ் விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கவும் குழந்தைகள் ஆணையத்துக்கே அதிகாரம் உள்ளது’ என்றனா்.