பணக்காரர்களுக்காக மக்களை நசுக்கும் பா.ஜ.க அரசு!

1 Min Read

மின்சார விநியோகத்திற்கான ஒப்பந்தம் அதானிக்கு ஒதுக்கீடு

மும்பை, செப்.26- மகா ராட்டிராவில் மின்சாரம் விநியோகத்திற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றியத்தில் மோடி தலைமை யிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதானி, அம்பானிகளின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரயில்வே, விமான நிலையம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவ னங்களை அதானிக்கு ஒன்றிய அரசு விற்று வருகிறது.
மேலும் நிலக்கரி உரிமம் ஆகிய வற்றை முறைகேடாக ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த ஆண்டு அதானியின் முறைகேடுகளை ஹிண்டர்பர்க் வெளியிட்டது. இது நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் கூட, அதானி ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ள னர். ஆனால் இதுவரை பிரதமர் மோடி அதானி, அம்பானி குறித்து வாய்திறக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மகாராட்டிரா வில் மின்சாரம் விநியோகத்திற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், ”பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராட்டிராவில் மின்சார விநியோகத்திற்கான ஒப்பந்தம் சமீபத்தில் அதானிக்கு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 முதல் 3 வரை மின்சாரம் கிடைக்கும் நிலையில், அதானி நிறுவனம் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.4 என்ற விலையில் வழங்குகிறது. மகாராட்டிர மக்களின் பாக்கெட் டுகளில் இருந்து யூனிட்டுக்கு ரூ.1 என்கிற அளவில் கொள்ளை நடக்கிறது. நாளை இது நாடு முழுவதும் அரங்கேறும்.” என தெரி வித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *