ராகுல்காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, செப்.26 வேலை வாய்ப்புகளைப் பறித்ததன் மூலம் அரியானா உள்பட நாட்டின் இளைஞர்களுக்கு பாஜக மிகப் பெரிய அநீதியை இழைத்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
ராகுல் காந்தி அண்மையில் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின்போது அங்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிலருடன் கலந்துரையாடல் நடத்தினார். இந்தக் கலந்துரை யாடல் அடங்கிய காணொலி காட்சியை அவர் எக்ஸ் வலைதளத் தில் செவ்வாய்க்கிழமை வெளி யிட்டார். அத்துடன் அவர் வெளி யிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
எனது அமெரிக்கப் பயணத் தின்போது அரியானாவைச் சேர்ந்த இளைஞர்களைச் சந்தித்தேன். தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்துள்ள அவர்கள் ஓர் அந்நிய நாட்டில் போராடி வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினரை நான் இந்தியா திரும்பியதும் சந்தித்தேன். அவர்களது கண்களில் வலியைக் கண்டேன்.
அரியானா இளைஞர்கள் சட்டவிரோத குடியேற்றச் செயல்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்? பாஜக பரப்பிய வேலையில்லாத் திண் டாட்டம் என்ற நோயால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு களைப் பறித்ததன் மூலம் அரி யானா உள்பட நாட்டின் இளை ஞர்களுக்கு பாஜக மிகப் பெரிய அநீதியை இழைத்துள்ளது.
நம்பிக்கை இழந்துள்ள இளை ஞர்கள் வெளிநாடுகளுக்கு சித்திரவதை மிகுந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு உள்நாட்டிலேயே வேலை கிடைத்தால் அவர்கள் எப்போதும் தாய்நாட்டை விட்டுச் செல்ல மாட்டார்கள்.
அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், இளைஞர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள தங்களுக்குப் பிரியமான வர்களை விட்டுச் செல்லத் தேவை யில்லாத சூழலை உருவாக்கு வோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவில் அமெரிக்கா வுக்கு புலம்பெயர்ந்து சென்ற இளைஞர்களின் குடும்பத்தினரை ராகுல் சந்திக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் சாலை விபத்தில் காயமடைந்த இந்திய இளைஞரின் குடும்பத்தினரை அரியானாவின் கர்னால் மாவட் டத்தில் உள்ள கிராமத்தில் அவர் அண்மையில் சந்தித்தார்