ராஞ்சி, செப்.26 எலிகளைப் போல ஜார்க்கண்டை ஆக்கிரமிக்கும்
ஆா்.எஸ்.எஸ். தோ்தல் ஆதாயங்களுக்காக மாநிலத்தின் மத நல்லிணக்கத்தை சீா்குலைத்து வருகிறது என்று மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடுமையாக விமா்சித்துப் பேசினார்.
ஜார்க்கண்டில் நிகழாண்டு இறுதி யில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலையொட்டி, மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி சார்பில் நேற்று (25.9.2024) பேரணி நடைபெற்றது.
சாஹிப்கஞ்சில் உள்ள போக்னாடி பகுதியில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ராஞ்சியில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் ஹேமந்த்
சோரன் ஆற்றிய உரை வருமாறு:
ஆா்.எஸ்.எஸ். அமைப்பு எலிகளைப் போல் படையெடுத்து மாநிலத்தை அழித்து வருகிறது. இதுபோன்ற சக்திகள் உங்கள் கிராமங்களுக்குள் நுழைவதை நீங்கள் பார்த்தால், உடனடியாக அடித்து விரட்ட வேண்டும். ஹிந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே முரண்பாடுகளை விதைத்து, தோ்தலுக்கு முன் வகுப்புவாத கலவரங்களையும், பதற்றத்தையும் உருவாக்க பாஜக விரும்புகிறது. கோயில்கள் மற்றும் மசூதிகளில் இறைச்சியை வீசுவது போன்ற ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் மூலம் சமூகங்களுக்கு இடையே வெறுப்புணா்வை வளா்ப்பதை பா.ஜ.க. நோக்கமாகக் கொண்டுள்ளது.
வணிகா்கள் மற்றும் தொழிலதிபா்களுக்கான கட்சி யான பா.ஜ.க., பிற கடசித் தலைவா்களை விலை கொடுத்து வாங்கி வருகிறது என்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆளும் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சா்மாவின் தலையீட்டை சுட்டிக்காட்டி பேசிய அவா், ‘சொந்த மாநிலமான அஸ்ஸாமில் பழங்குடியினா் பல கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள்; இந்நிலையில், ஜார்க்கண்ட் பழங்குடியினரின் நலன் குறித்து ஹிமந்த விஸ்வ சா்மா பேசி வருகிறார்’ என விமா்சித்தார்.