மூடநம்பிக்கையில் முத்திப் போன திருப்பதி தேவஸ்தானம் லட்டு – தோஷம் கழிக்க விளக்கேற்ற வேண்டுமாம்!

viduthalai
2 Min Read

திருப்பதி, செப்.25- அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் பலரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. அதாவது திருப்பதி லட்டு பிரதேசத்தில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்தது.

நெய்யின் விலை அதிகமாக இருப்பதால் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவற்றிலிருந்து நெய் தயாரிக்கப்பட்டு அதை லட்டுக்கு பயன்படுத்தி உள்ளதாக கண்டறியப்பட்டது. இந்த செய்தியால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இதனால் கோயிலின் புனிதம் கெட்டு விட்டதாக மூன்று நாட்கள் சிறப்பு யாகங்கள் செய்ய கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. அதேபோல் பவன் கல்யாண் போன்ற பிரபலங்கள் 11 நாள் விரதத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் வைத்த வேண்டுகோள்

ஆனால் இப்போது திருப்பதி தேவஸ்தானம் மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் நேற்று (23.9.2024) மாலை 6 மணிக்கு அனைவரும் வீட்டில் விளக்கேற்ற வேண்டுகோள் வைத்திருந்தனர்.

அப்படி விளக்கு ஏற்றினால் கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டவர்களின் தோஷம் விலகும் என்றும் கூறியிருந்தனர். கோவிட் தொற்றால் பல உயிர்கள் இறந்தபோது இரவு விளக்குகளை 5 நிமிடம் அணைத்துவிட்டு கைதட்டினால் கரோனா போய்விடும் என்று மூடநம்பிக்கையை பரப்பினார்கள்.

அதேபோல் தான் இப்போது வீட்டில் விளக்கேற்றினால் தோஷம் விலகிவிடும் என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு மூடநம்பிக்கையில் திருப்பதி தேவஸ்தானம் முற்றிப்போய் உள்ளது.

தமிழ்நாடு அரசின் செயல்திறன்!
திட்டங்களைக் கண்காணிக்க மாவட்டத்துக்கு ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி

சென்னை, செப்.25– தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களை கண்காணிக்க அய்ஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்யவும், அது குறித்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவும் அய்ஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்த, கண்காணிக்க மாவட்ட வாரியாக அய்ஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அய்ஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறப்பு திட்ட அமலாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள்.
மாதம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும்”. கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத் துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *