திருச்சி, செப்.24- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி யில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகைக்கான துவக்க விழா 18.09.2021 அன்று காலை 10 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வரவேற்புரையாற்றினார். அவர் தமது உரையில்:
“அனைவருக்கும் அனைத் தும்” என்ற சமூக நீதியினை நிலைநாட்ட பாடுபட்ட அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பெயரால் அமைந்திருக்கும் பெரியார் மருந்தியல் கல்லூரியினை தேர்வு செய்த பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தமது வாழ்த்துகளையும், நன்றி யினையும் தெரிவித்துக்கொண்ட தோடு, மாணவர்களுக்கு கல்வியோடு தன்மானம், பகுத்தறிவு, சுயமரியாதை போன்றவற்றை கற்பித்து அவர்களை சமுதாய சிந்தனை மிக்க மக்கள் மருந்தாளுநர்களாக உருவாக்குவதே இக்கல்லூரியின் நோக்கம் என்றும் உரையாற்றி னார்.
தன்னம்பிக்கை உரை
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் உருமு தனலெட்சுமி கல்லூரியின் தமிழ்த் துறை உதவி பேராசிரியர் முனைவர் தமிழருவி மனோன்மணி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தன்னம் பிக்கை உரை நிகழ்த்தினார்.
அவர் தமது உரையில், கல்வி என்பதனை கடைகோடி மனிதனுக்கும் கிடைக்கச் செய்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பெயரால் அமைந்த கல்லூ ரியில் பெற்றோர்கள் தங் களது பிள்ளைகளை இணைத் திருப்பதே முதல் வெற்றி என்றும் மருத்துவம் தொடர்பான படிப்பு களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் உரையாற்றினார்.
மேலும் மாணவர்கள் தங்கள் பெற்றோரின் கடின உழைப்பையும் அர்ப்பணிப் பையும் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
பெற்றோர்களை விட நம் மேல் அன்பும் அக்கறையும் உள்ளவர்கள் இந்த உலகத்தில் கிடையாது என்றும் அவர்களின் கனவை நினைவாக்குவதே மாணவர்களின் தலையாய கடமை என்றும் உரையாற் றினார்.
ஆக்கபூர்வமான செயல்பாடுகளில்…
மாணவர்கள் கல்வியோடு வாழ்க்கையில் வரக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேளிக்கைகளிலும் கிண்டல்களிலும் காலத்தைக் கழிக்காமல் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் மாணவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.
அலைபேசியினை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவது சாலச் சிறந்தது என்றும் புத்தகங்கள் வாசிப்பதை பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உரையாற்றினார்.
மேலும் எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டாலே வாழ்க்கையில் வெற்றி நம்மைத் தேடி வரும் என்று உரை யாற்றி அனைவருக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் முனைவர் அ.மு.இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி, இள நிலை மருந்தியல் துறையின் முதன்மையர் முனைவர் சு.கற்பகம் குமரசுந்தரி, பட்டயப் படிப்பின் முதன்மையர் பேராசிரியர் கே.சக்திவேல் மற்றும் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பநர் துறைத் தலைவர் பேராசிரியர் க.உமா தேவி ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரியின் வசதி வாய்ப்புகள், மருந்தியல் துறைக்கான தொழில் வாய்ப்புகள். பல் கலைக்கழக நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக பேராசிரியர் க.உமாதேவி அவர்கள் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.