தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு புதுடில்லியில் உரை
புதுடில்லி, செப்.24 மக்களாட்சியை நிலைநாட்டுவதும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளின் தலையாய கடமையாகும்.
இந்தியாவின் தலைநகரான புது டில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் இந்திய மண்டலத்தின் 10 ஆவது கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உரையாற்றினார்.
அவர் உரையாற்றுகையில், “இந்திய மக்களாட்சியில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையின் தோற்றம், 1921 ஆம் ஆண்டில் மெட்ராஸ் பிரசிடென்சியில் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்ற பெயரில் அமைக்கப்பட்டது.
இது, தற்போதைய தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கருநாடகா மாநிலங்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது. அந்த காலத்தில், இந்தியாவில் சட்டங்களை இயற்றக்கூடிய சட்டமன்ற அமைப்பு கள் சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் மட்டுமே செயல்பட்டு வந்தன.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தினை மக்களாட்சியின் தொட்டில் என்று அழைப்பர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பை பறைசாற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவரின் கலைநயமிக்க நாற்காலியை, 1922 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில், சென்னை மாகாண ஆளுநர் வெலிங்டன் பிரபு மற்றும் அவரது மனைவி லேடி வில்லிங்டன் ஆகியோரால் அப்போதைய மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த நாற்காலி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பழமையானது என்றாலும், அது அதன் பொலிவை இழக்காமல், துடிப்பான மக்களாட்சியின் அடை யாளமாக தற்போதும் திகழ்கிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நாற்காலியில் அமர்ந்து பேரவையை நடத்தும் மிகப்பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இது என்னைப் போன்ற சாதாரண மனிதனுக்கு மக்களாட்சியில் கிடைத்த மாபெரும் பரிசாகும். இந்த வாய்ப்பினை எனக்கு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த நூற்றாண்டில், இந்தியா வின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை, பல முன்னோடி சட்டங்கள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றியது. அப்போதைய மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் 01.04.1921 அன்று இந்தி யாவில் பெண்களுக்கு முதல் முறை யாக வாக்களிக்கும் உரிமையை வழங்கும் ஒரு வரலாற்றுச் சட்டத்தை நிறைவேற்றியது.
இந்திய சட்டமன்ற வரலாற்றில் இடஒதுக்கீடு குறித்த சட்டத்தை இயற்றிய முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இதுவாகும், அதுவே இந்தியாவில் நிலையான கொள்கை யாக மாறியுள்ளது. மக்களாட்சியை நிலைநாட்டுவதும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளின் தலையாய கடமை யாகும். சட்டங்களை இயற்றுதல், கொள்கைகளை உருவாக்குதல், வருவாய் ஈட்டுதல், வறுமையை ஒழித்தல், நிர்வாகத்தை மேற்பார்வை செய்தல், எதிர்கால சந்ததியினருக்கான நல்ல திட்டங்களை உருவாக்குதல் ஆகிய மிக முக்கியமான வேலைகளை சட்டமன்றங்கள்/நாடாளுமன்றம் செய்கின்றன.
பேரவைத் தலைவரின் தலையாய பணி என்பது மக்களின் நலனை அவர்களின் பிரதிநிதிகள், அதாவது சட்டமன்ற உறுப்பினர்கள், மூலம் நிறைவேற்றுவதை உறுதி செய்வதாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 105 மற்றும் 194 ஆகியவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அதிகாரங்கள், சிறப்பு உரிமைகள், சலுகைகள் மற்றும் சட்ட ரீதியான விலக்குகளை வழங்கு கின்றன.
இவ்வாறு அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட உரி மைகள் மற்றும் சலுகைகளை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், சமீபகால நிகழ்வுகள் மக்க ளாட்சிக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. மாநில சட்ட மன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால், சில சமயங்களில் ஒருமனதாக, நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளைப் பயன்பாட் டிற்கு கொண்டு வர முடியவில்லை.
சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட சில மசோதாக்கள், கார ணமின்றி, பல ஆண்டுகளாக ஆளுநர் அலுவலகத்தில் முடங்கிக் கிடப்பதால், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல், அவர்களின் அதிருப்திக்கு ஆளாகின்றனர். பேரவையை அவமதிப்பது என்பது அந்த சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களை அவமதிப்பதாகும்.
ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பி னர்களும் வெளியேற்றப்பட்ட சூழ்நிலையிலும், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறை வேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஓரிரு மணி நேரத்தில் தனது ஒப்புதலை வழங்குகிறார் என்பதை நான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
ஆனால், சில மாநிலங்களில், அம்மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கூட அம்மாநில ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதில்லை.
இது குறித்து, மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவரைப் பின்பற்றி மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளித்து, அதன் மூலம் அரசமைப்பு விதிகளை நிலைநிறுத்தும் வகையில் ஒரு அமைப்புமுறையை உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் தலையீட்டால் ஏற்படும் குழப்பங் களைத் தவிர்க்க முடியும் என்றார் அவர்.