தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரீகேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான தந்தை பெரியார் மாறுவேடப் போட்டி, தந்தை பெரியாரின் பொன்மொழிகள், “தந்தை பெரியாரைப் பற்றி கவிதைகள் சொல்ல வா..!” என்ற தலைப்பில் கவிதைப் போட்டி, “பெரியாரும் பெண் விடுதலையும்” என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டி மற்றும் “தந்தை பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள்” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் பள்ளியின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். போட்டிகளில் வெற்றி வாகை சூடிய மாணவர்களுக்குப் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தமிழாசிரியைமு.ராகிணி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
Leave a comment