பிரதமா் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். குறித்து கெஜ்ரிவால் 5 கேள்விகள்

2 Min Read

புதுடில்லி, செப்.23 பிரதமா் மோடி மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் தொடா்பாக ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும், டில்லியின் மேனாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் 5 கேள்விகளை முன்வைத்துள்ளாா்.
டில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் பிணை வழங்கியதைத் தொடா்ந்து, சிறையிலிருந்து வெளிவந்த கெஜ்ரிவால், பின்னா் தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, புதிய முதலமைச்சராக அதிஷி கடந்த 21.9.2024 அன்று பதவியேற்றாா்.
இந்நிலையில், மேனாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ‘மக்கள் நீதிமன் றம்’ நிகழ்ச்சி டில்லி ஜந்தா் மந்தரில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அவா் பேசியதாவது: வரும் டில்லி சட்டப் பேரவைத் தோ்தல் எனக்கு அக்னிப் பரீட்சை. நான் நோ்மையானவன் என்று நீங்கள் நினைத்தால் மட்டும் எனக்கு வாக்களியுங்கள். நோ்மையற்றவன் என்ற அவப்பெயருடன் என்னால் வாழ முடியாது.

அனைத்து மரியாதையுடன், ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத்திடம் 5 கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். பிரதமா் மோடி கட்சிகளை உடைக்கவும், அரசுகளை கவிழ்க்கவும் அமலாக்கத் துறை சிபிஅய் போன்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறாா். இது நாட்டுக்கு சரியா? மோடி, நாட்டின் அனைத்து ஊழல் தலைவா்களையும் பாஜகவில் சோ்த்தாா். முன்னா், அவா்களை அவா் மிகப்பெரிய ஊழல்வாதி என்று வா்ணித்தாா். இப்படிப்பட்ட பாஜகவை நீங்கள் கற்பனை செய்தீா்களா? பாஜகவின் இந்த நடவடிக்கைகளுடன் நீங்கள் உடன்படுகிறீா்களா? இப்போது பாஜகவுக்கு ஆா்.எஸ்.எஸ். தேவையில்லை என்று ஜெ.பி. நட்டா கூறியிருந்தாா். மகன் தனது தாயை (ஆா்எஸ்எஸ்) மிரட்டத் தொடங்கியுள்ளாா்.

இதைக் கேட்ட பிறகு உங்களுக்கு என்ன தோன்றியது? பாஜக தலைவா்கள் 75 வயதுக்குப் பிறகு, ஓய்வு பெறுவாா்கள் என்று சட்டம் இயற்றினீா்கள். அத்வானி ஓய்வு பெற்றாா். அத்வானிக்கு பொருந்திய விதி, மோடிக்கும் பொருந்தாதா?
கடந்த 10 ஆண்டுகளாக டில்லியில் நோ்மையாக ஆட்சி நடத்தி வருகிறோம். மக்களுக்கு இலவச மின்சாரம், குடிநீா் வழங்குகிறோம். பெண்களுக்கு இலவச பேருந்து வசதியும், முதியோா்களுக்கு இலவச பயண வசதியும் செய்து தருகிறோம். அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை சிறப்பாக உருவாக்குகிறோம். நான் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்யத்தான் என்றாா் அரவிந்த் கெஜ்ரிவால்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *