பள்ளிகளுக்கு 28ஆம் தேதி முதல் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தகவல்

1 Min Read

சென்னை, செப். 22- தமிழ் நாட்டில் பள்ளிகளுக்கு 28ஆம் தேதி முதல் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும், கல்வியாண்டு நாட்காட்டி வெளியிடப்படுகிறது. அந்த வகையில் கல்வியாண்டு நாட்காட்டியில் 220 வேலை நாட்கள் என்று முதலில் தெரிவிக் கப்பட்டு இருந்தது.

இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை 210 ஆக குறைத்து, திருத்தப் பட்ட நாட்காட்டியையும் கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில் கல்வி யாண்டு நாட்காட்டியில் தெரி வித்தபடி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வும் தொடங்கியுள்ளது.

பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கு 19.9.2024 அன்று தொடங்கிய நிலையில், 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு நேற்று முன்தினம் 20.9.2024 முதல் காலாண்டு தேர்வு தொடங்கியது. மற்ற வகுப்பு களுக்கும் தேர்வு தொடங்கி உள்ளது.

மொத்தத்தில் வருகிற 27ஆம் தேதிக்குள் காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடை பெறுகிறது.
தேர்வு முடிந்ததும், வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *