பெங்களுரு, செப். 22- நாகமங்களா மதக்கலவரத்திற்கு பாஜக தான் காரணம் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டினார். இது குறித்து மைசூரில் செய்தியாளா்களிடம் அவா் நேற்று முன்தினம் (20.9.2024) கூறியதாவது:
மண்டியா மாவட்டத்தின் நாகமங் களாவில் 11.9.2024 அன்று நடந்த மதக் கலவரத்திற்கு காவல் துறையின் அலட்சியமே காரணம் என்பது தெரிந்த வுடன் மாவட்ட காவல் துணை கண் காணிப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கருநாடகத்தில் மொத்தம் 60 ஆயிரம் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் நாகமங்களா, தாவணகெரே ஆகிய 2 இடங்களில் மட்டுமே வன் முறை நிகழ்வுகள் நடந்துள்ளன.
தாவணகெரேயில் கல்வீச்சு நிகழ்வு மட்டுமே நடந்தது. நாகமங்களாவில் தான் கடைகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. பாஜகவினா் மத உணா்வுகளை தூண்டுகிறார்கள். நாகமங்களாவில் நடந்த மதக்கலவரத்திற்கு பாஜகவினா் தான் காரணம். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மேனாள் முதலமைச்சர்கள் எடியூரப்பா, எச்.டி.குமாரசாமி ஆகியோர் பெங்களூரில் அரசு கையகப்படுத்திய நிலத்தை விடுவித்தது தொடா்பான வழக்கை விசாரணை அமைப்பு காலதாமதமாக விசாரிப்பது குறித்து விசாரிப்பேன். அது குறித்து முழுமையாக தெரிந்து கொண்டபிறகு கருத்து தெரிவிப்பேன். அமைச்சா்கள் கிருஷ்ணபைரே கவுடா, தினேஷ் குண்டுராவ், சந்தோஷ்லாட் ஆகியோர் 19.9.2024 அன்று நடத்திய பத்திரிகையாளா் சந்திப்பில் அது குறித்து விளக்கியிருக்கிறார்கள்.
உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வரை கலந்தாலோசித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப்படை (எஸ்.அய்.டி.) அமைப் பது குறித்து முடிவெடுக்கப்படும்.
முனிரத்னா மீது 3 வழக்குகள் உள்ளன. மைசூரு தசரா திருவிழாவை தொடக்கி வைப்பதற்கு இலக்கியவாதி ஹம்ப நாகராஜயாவை தோ்ந்தெடுத்துள்ளோம். மாவட்ட பொறுப்பு அமைச்சா், அரசு அதிகாரிகள் முறையாக அவருக்கு அழைப்பு விடுப்பார்கள் என்றார்.