கந்தர்வகோட்டை, செப்.22 புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தி ஒன்று முதல் அய்ந்து வகுப்பு வரை ஆண்டிற்கு 2000ரூபாய் ஆகவும், ஆறு முதல் எட்டு வகுப்பு வரை ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் ஆகவும், ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆண்டிற்கு 8000 ரூபாய் ஆகவும் ,பட்டப் படிப்பிற்கு ஆண்டிற்கு 12000 ரூபாய் ஆகவும்,
தொழில் கல்வி மற்றும் முதுகலை பட்ட படிப்பிற்கு ஆண்டிற்கு 14000 ரூபாய் ஆகவும் உயர்த்தியும், மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்பு கல்வியினை ஊக்குவிக்கும் பொருட்டு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 50 மாணவ மாணவிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் வகையில் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம் செயல்படுத்துவதற்கும் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கி உள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும், ஆராய்ச்சி படிப்பில் சேரக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மேலும் கலைஞர் வழியில் பொற்கால ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதல மைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வரும் நிலையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழிய ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமமல்படுத்த வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உரிமையுடன் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.