புதுடில்லி, செப். 21- டில்லியில் அமைந் துள்ள ஜாமியா மில்லியா இசுலாமிய பல் கலைக்கழகத்தில் பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழாவை ஒட்டி “பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்: சமூக நீதிக்கான ஒரு புரட்சிகர பாதை” எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிகழ்வினை பேராசிரியர் முஜிபுர் ரஹ்மான் தலைமையற்றார், பேராசிரியர் அரவிந்த் குமார் மற்றும் ஆய்வு மாணவர் இளைய குமார் இந் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் சந்திப் அவர்கள் பெரியாரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றில் இருந்து பேச்சை தொடங்கினார். ஜாதி ஒழிப்புப் பெண் விடுதலை சமுதாய சீர்திருத்தம் என்று சுயமரி யாதை இயக்கம் முதல் திராவிடர் கழகம் வரை முக்கியமான நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசினார்.
இந்த நிகழ்வின்போது ஆசிரியர் அவர்கள் டில்லி பல்கலைக்கழகத்தில் பேசிய பல சிந்திக்கத்தக்க கருத்துகளை சந்திப்பவர்கள் மாணவர்களிடத்தில் பகிர்ந்தார். மேலும் ஆசிரியரை அழைத்து ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்வினை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவில் நிலவும் தற்போதய கருத்து மோதல்களுக்கு பெரியார் தான் சரியான மருந்து என்று குறிப்பிட்டார். அது மட்டுமல்லாது, பெரியாரின் திராவிட நாடு கோரிக்கை முதல் இந்திய கூட்டமைப்பில் மாநில சுயாட்சி வரை மற்றும் கோயில் நுழைவு போராட்டம் முதல் நாத்திகம் வரை எப்படி சமுதாய ஜனநாயகத்திற்காக பெரியார் சமுதாயப் பணி செய்தார் என்பதை குறிப்பிட்டு பேசினார்.
பேராசிரியர் அரவிந்த் பெரியாரின் எழுத்துகளை ஹிந்தியிலும் மற்ற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்து பேசினார். பீகார் உள்ளிட்ட மற்ற மாநிலங் களுக்கும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதற்கு காரணம் பெரியார் தான் என்பதை அழுத்தமாக தெரிவித்தார்.
மாணவர்கள் ஆர்வத்தோடு பல்வேறு கேள் விகளை கேட்டனர். மேடையில் அமர்ந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில்களை கூறினர்.
நிகழ்வின் இறுதியாக தொகுத்து பேசிய ஆய்வு மாணவர் இளைய குமார் பெரியாரை அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்து அவர் எல்லோருக்கும் எதிரானவர் என்பது போல ஒவ்வொரு தரப்பினரும் முயற்சி செய்து வரும் இந்த காலகட்டத்தில், கோர்வையாக துவக்கம் முதல் இறுதி வரை பேசிய பேராசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
நூல்கள் அறிமுகம்
மேலும் திராவிடர் கழகம், தமிழ் நாடு அரசு மற்றும் காட்டாறு போன்று பல்வேறு அமைப்புகளின் மொழி பெயர்ப்பு முயற்சிகளையும் புதிய புத் தக வெளியீடுகளையும் சுருக்கமாக அறிமு கப்படுத்தி பேசினார். மாணவர்கள் ஆர்வத் தோடு பெரியார் மற்றும் திராவிட இயக்கம் சார்ந்த புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.