ரவுடிகளின் இருப்பிடத்துக்கு சென்று நன்னடத்தையை காவல் துறையினர் ஆய்வு

1 Min Read

வேலூர், செப். 18- வேலூா் மாவட்டத்திலுள்ள சரித்திர பதிவேடு ரவுடி களின் இருப்பிடத்துக்கே சென்று அவா்களின் நன்னடத்தைகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்த ஆய்வறிக்கைகளின் படி தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டக் காவல் கண் காணிப்பாளா் என்.மதி வாணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூா் மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்க மாவட்டம் முழு வதும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகளை அவா்களது இல்லத்துக்கே நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்
என்.மதிவாணன் அனைத்து காவல் நிலைய காவல் துறையினருக்கும் உத்தர விட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் அனைத்துக் காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், காவல் துறை யினர் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சரித்திர பதிவேடு ரவுடிகளை அவா்களின் இருப்பிடத்துக்கே சென்று அவா்களின் தற்போதைய இருப்பிடம், வேலை மற்றும் தொழில், வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடு கின்றனரா என்பது குறித்து தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், மாவட்டம் முழுவதும் 383 ரவுடிகள் மீது சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரவுடிகள் அனைவரையும் காவல் துறையின் சிறப்பு குழுவினா் கடந்த 3 நாள்களாக அவா்களின் இருப்பிடத்துக்கே சென்று அவா்களின் தற்போதைய நிலை அறிந்து வருகின்றனா்.

அத்துடன், தினமும் பகல், இரவு ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் துறையினரும் மாவட்டம் முழுவதும் உள்ள குற்றவாளிகளை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இந்த ஆய்வறிக்கை களின் அடிப்படையில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ரவுடிகள் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *