ஊர் திரும்பியவர்கள் – வேர் ஊன்றியவர்கள்!

viduthalai
2 Min Read

இந்நிகழ்ச்சியில், அறிவுப் புதையல், எளிதில் கிடைக்க முடியாத உழைப்பின் விளைச்சல், வரலாற்றுப் பெருமையை என்றைக்கும் ஆய்வு செய்யக்கூடிய அளவிற்கு ஒரு நுழைவு வாயில் என்று சொல்லத் தகுந்த இந்த ‘‘ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர் – தென்கிழக்கு ஆசியாவிலும், சிங்கப்பூரிலும் தமிழர் – நூல் ஆய்வு” என்ற அருமையான இந்நூல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் அருண் மகிழ்நன் அவர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றபொழுது, தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களோடு தொடர்புடையவர்களை ஆய்வு செய்யவேண்டும், சந்திக்கவேண்டும் என்று பதிவு செய்தார்.

பேராசிரியர் சிந்தனையாளர்
அருண்மகிழ்நன்

அப்பொழுது என்னை பெரும் வியப்பில் ஆழ்த்திய ஒன்று, அய்யா மிகப்பெரிய அறிஞர், தமிழார்வலர் மட்டுமல்ல, அவர் அடக்கத்தின் காரணமாகத்தான் பல நேரங்களில் ஒதுங்கிக் கொள்கிறார். பதுங்கிக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழ்நிலையில், மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக, செவ்வி, பேட்டி, நேர்காணல் இவற்றையெல்லாம் பதிவு செய்த பிறகு, இதே தேசிய நூலகத்தில் சிறப்பாக இந்நூலை ஆக்கம் செய்த அய்யா பேராசிரியர் சிந்தனையாளர் அருண்மகிழ்நன் அவர்கள் இந்த நூலை எனக்குத் தந்தார் கையொப்பமிட்டு சில மாதங்களுக்கு முன்பு கொடுத்தார். அது எனக்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது.

பொதுவாக, வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பு கிறபொழுது என்னுடைய பெட்டி கனமாக இருக்கும். அது சில பேருக்குப் பார்வையில் உறுத்தும்; ஏராளமான பொருள்களைப் பெற்று வந்திருக்கின்றார் போலும் என்று.
இல்லை, அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தால்தான், நான் கற்று வந்தவைகள், கற்க வேண்டிய நூல்கள் இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நூலை அவர் எனக்கு அளித்தார். சென்னை பெரியார் ஆய்வகம் பகுத்தறிவு நூலகத்தில் அணி செய்கிறது. அதுதான் திராவிட இயக்கத்தினுடைய ஆராய்ச்சி ஊற்றுகளில் ஒன்றாக இருக்கிறது; அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.

‘‘நூலைப் படி, நூலைப் படி’’ என்றார் புரட்சிக்கவிஞர்!

அந்த நூலை ஆய்வகத்திற்குக் கொண்டு போய் செலுத்தவேண்டும் என்பதற்காக, அவர் கொடுத்தார். ஆனால், சென்ற உடனே, சில நாள்களுக்குள்ளாக அந்நூலைப் படித்து, இங்கே புறப்படுவதற்கு முன்பாகவும், மூன்று மணிநேரம் இந்த நூலைப் படித்தேன்- ‘‘நூலைப் படி, நூலைப் படி” என்றார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.
அதன்படி அந்த வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்திக் கொண்டபொழுது, இது ஓர் அறிவுப் புதையல் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *