அன்றாடம் பாலியல் வன்கொடுமை மறுபக்கம்
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில்
இந்தூர், செப். 17–- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவ அதிகாரிகளை அடித்து கட்டிப் போட்டு அவர்களுடன் சென்ற உறவுக்காரப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத்தில் இருந்து மீளாத நிலையில் மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர் ஒருவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர், ராணுவ வீரராக பணியாற்றி வரும் நபருக்கு எதிராக பாலியல் வன்கொடுமைப் புகாரை அளித்திருக்கிறார்.
அந்த புகாரின்படி, வங்கி ஒன்றில் கடன் பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்த இந்தூரில் உள்ள விடுதி ஒன்றிற்கு வரும்படி அந்த ராணுவ வீரர் பெண்ணிடம் கூறியுள்ளார். இதன்படி, கடந்த 13.9.2024 அன்று அந்த பெண் சென்றிருக்கிறார். அப்போது, அந்த பெண்ணை ராணுவ வீரர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கண்ணாடி ஒன்றையும் திணித்துள்ளார். இதனால், காயமடைந்த அந்த பெண் ரத்தம் வழிய மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை அந்த வீரர் மறுத்துள்ளார்.
ஆனால் அந்தப் பெண் படத்தை ஆடையில்லாமல் சித்தரித்து அதைக் காட்டி, அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார் என அந்த பெண் குற்றச்சாட்டாக கூறியிருக்கிறார். இந்த நிகழ்வு பற்றி இந்தூர் மகளீர் காவல் நிலைய அதிகாரி கவுசல்யா சவுகான் கூறும்போது, அந்த ராணுவ வீரர் உத்தரப் பிரதேசம் கிழக்கு பகுதியில் இருந்து வந்தவர்.
அசாமில் இராணுவ வீரராக பணியமர்த்தப்பட்டு உள்ளார். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.
புகாரை தொடர்ந்து, காவல் துரையினர் அந்த ராணுவ வீரரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
ரயில் விபத்தும் பாலியல் வன்கொடுமையும் பிஜேபி ஆளும் மாநிலத்தில் அன்றாட ‘வானவில்’ அறிக்கை!