புதுடில்லி, செப்.17–- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 14.9.2024 அன்று பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்கள் தாய் மொழியில் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“பிற மொழிகள் மூலம் முன்னேற்றம்” என்ற கவலைகளால் அவர்கள் திசைதிருப்பப்பட வேண் டாம் என்று அறிவுறுத்தினார்.
எதிர்காலம் இந்திய மொழி களுக்கு சொந்தமானது என்றும், நாட்டை இனி காலனித்துவ சங்கிலி களால் பிணைக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
உள்துறை அமைச்சகத்திலுள்ள அனைத்து கோப்புகளும் ஹிந்தியில் இருப்பதை உறுதி செய்ததாக அமித் ஷா கூறினார்.
“என்னைப் போன்ற ஒருவருக் குக் கூட ஹிந்தியில் உள்ள அனைத்து கோப்புகளையும் பெற மூன்று ஆண்டுகள் ஆனது என்பதை அனைத்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கும் நான் கூற விரும்புகிறேன்.
எனது அமைச்சகங்களில் (உள்துறை மற்றும் ஒத்துழைப்பு) எந்தத் தொடர்பும் மற்றும் கோப்புகளும் ஆங்கிலத்தில் இல்லை, அனைத்து கோப்புகளும் ஹிந்தியில் உள்ளன,” என்று அமித் ஷா கூறினார். “அகில பாரதிய ராஜ் பாஷா சம்மேளன”த்தில் இந்தியின் 75ஆவது ஆண்டு அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது.
ஹிந்தி மற்ற இந்திய மொழிக ளுக்குப் போட்டியாக இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
அமித் ஷா “பாரதிய பாஷா அனுபவ்” (BBA) அல்லது இந்திய மொழிப் பிரிவைத் துவக்கினார். எந்த வொரு கட்டுரை, பேச்சு அல்லது கடிதம் ஹிந்தியில் இருந்தால், ‘பிபிஏ’ அதை நாட்டின் அனைத்து மொழி களிலும் மொழிபெயர்க்கும் என்று அவர் கூறினார்.
“அதேபோல், நாட்டின் அனைத்து மொழிகளின் இலக்கியம், கட்டுரைகள் மற்றும் பேச்சுக்கள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்படும், இது காலத்தின் தேவை” என்று அமித் ஷா கூறினார்.
ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரா கண்ட் ஆகிய மாநிலங்கள் முழு மருத்துவக் கல்வி பாடத் திட்டத் தையும் ஹிந்தியில் கிடைக்கச் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார். “வரவிருக்கும் நாட்களில், ஆராய்ச்சியின் மொழி நிச்சயமாக ஹிந்தியாக இருக்கும்” என்று அமித் ஷா கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து கவிஞர்கள், அறிஞர்கள் மற்றும் பிரபல எழுத்தாளர்கள் கலந்து கொண்டனராம்!