வீடெல்லாம் நாடெல்லாம் ஒலிக்கட்டும் – ‘‘பெரியார் வாழ்க!’’

viduthalai
1 Min Read

பிறக்கவில்லை
பெரியார் என்றால்
இறப்புக் குழியினில்
இனமக்கள் வீழ்ந்திருப்பர்!

பதவி அரசியல் படகினில்
பயணித்திருந்தால்
பார்ப்பனீயத் திமிங்கலம் – நம்மைப்
பசியாறி யிருக்கும்!

அரசியலும் நம்பக்கம்
நடக்கிறது என்றால்
அரசியல் பாதையை
அய்யா துறந்த தனால்!

பாசிசப் பாம்புக்கு
ஒவ்வாமையாக தமிழ்நிலம்
தழைக்கிற தென்றால்
தந்தை பெரியார்தம் கைத்தடியால்!

பெரியார் கொள்கை எனும்
பகுத்தறிவுப் பேராறு
பாய்கிறது எங்கெங்கும் – நாடு
கோடுகளைத் தாண்டியே!

மண்டைச் சுரப்பை
உலகு தொழும் என்றார்
புரட்சிக்கவிஞர் – இன்று
கண்ணில் காண்கிறோம்!

புயலின் பிள்ளைகள்
புறப்பட்டு விட்டார்கள்
வயலில் மண்டிக் கிடக்கும்
வருணாசிரம களையழிக்க…!

வெல்வார் பெரியார்
வெல்லும் வாளெடுப்போம்!
வீடெங்கும் நாடெங்கும்
ஒலிக்கட்டும், ‘‘பெரியார் வாழ்க!’’

– கவிஞர் கலி.பூங்குன்றன் –

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *