சென்னை, செப்.17 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2024) சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் மாலை அணிவித்து, பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு, சமூகநீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ச.இன்பக்கனி, சே.மெ.மதிவதனி மற்றும் மகளிரணி, இளைஞரணி தோழர்கள் பங்கேற்றனர்.
தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள்: கழகத் துணைத் தலைவரின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!

Leave a Comment