அரூர் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் துண்டறிக்கை வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலையில் வெளிவந்த அறிக்கையை (பெரியார் அண்ணா பிறந்தநாளை பெருவிழாவாக கொண்டாட வேண்டும்) செயல்படுத்தும் விதத்திலும், மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றும் விதத்திலும் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பையர்நத்தம்வெங்கடேஷ், பாப்பிரெட்டிப்பட்டி தென்னரசு, .பிரேம்குமார், இராஜேஸ் ஆகியோர் மாணவர்களுக்கு 300 துண்டறிக்கைகளை வழங்கினர்.
அண்ணா பிறந்தநாளை பெருவிழாவாக கொண்டாட வேண்டும்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:கி.வீரமணி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
