பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழா வல்லம், பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பிறந்த நாள் விழாவில் ஒரு நிகழ்வாக 12.09.2024 அன்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து இக்கல்லூரி வளாகத்தில் நடத்திய குருதிக் கொடை முகாமில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு குருதிக் கொடை அளித்தனர்.
தஞ்சாவூர் மருத்துவ இரத்த மய்யம் மருத்துவர் ஆர்.வி.எஸ்.வேல்முருகன் தனது மருத்துவக் குழுவினருடன் இணைந்து குருதிக் கொடை முகாமினை சிறப்பாக நடத்தினார். இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா குருதிக் கொடை முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் துணைமுதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பெரியார் பாலிடெக்னிக்கில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்
Leave a Comment