தருமபுரி, செப்.15- தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் பொறுப்பாளர்கள் கூட்டம் 10.9.2024 அன்று மாலை 5 மணிக்கு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்திற்கு தகடூர்தமிழ்செல்வி மாநில மகளிரணி செயலாளர், கதிர்.செந்தில்குமார் ப.க மாவட்ட தலைவர், மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணை செயலாளர், முன்னிலை வகித்தனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் வழிகாட்டல் உரை வழங்கினார்.
அரூர் மாவட்ட திராவிடர் கழக தலை வர் அ.தமிழ்செல்வன், ப.க மாவட்ட அமைப்பாளர் தி.அன்பரசு, ப.க மாவட்ட செயலாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தொழிலாளரணி தலைவர் சிசுபாலன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் பெ.மாணிக்கம் மாதேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:
தருமபுரி நகரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு 17/09/2024 அன்று காலை 11 மணிக்கு மாலை அணிவித்து, பட ஊர்வலம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் கீழ்க்கண்ட இடங்களில் பெரியார் சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.
தருமபுரி நகரில் உள்ள சிலை மாவட்ட தலைவர் தலைமையில் மாலை அணி விக்கப்படுகிறது.
பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூண் கொடியேற்றுதல்: பீம.தமிழ்பிரபாகரன் மாவட்ட செயலாளர்.
புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் கொடியேற்றுதல்: மாநில மகளிரணி செயலாளர் தகடூர்.தமிழ்செல்வி.
காமலாபுரம் தந்தை பெரியார் சிலைக்கு: கிளை தலைவர் சின்னசாமி தலைமையில்.
பெரியாம்பட்டி சமத்துவபுரம் தந்தை பெரியார் சிலைக்கு: ப.க மாவட்ட தலைவர் கதிர்.செந்தில்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை.
பாப்பாரப்பட்டியில் கொடியேற்றுதல்: சுந்தரம் ஆசிரியர், வினோபாஜி.
பாடி சமத்துவபுரம் தந்தை பெரியார் சிலைக்கு: மாவட்ட துணைத் தலைவர், க.சின்னராசு விடுதலை வாசகர் வட்ட தலைவர் இளைய.மாதன்.
பென்னாகரம் கடமடை கொடியேற்றுதல்: ஒன்றியத் தலைவர் அழகேசன்
பென்னாகரம் பெரியார் நகர்: ப.க ஒன்றிய தலைவர் மு.சங்கரன்
பென்னாகரம் தந்தை பெரியார் சிலை: பொதுக் குழு உறுப்பினர் அ.தீர்த்தகிரி
பென்னாகரம் சமத்துவபுரம் தந்தை பெரியார் சிலைக்கு: ப.க ஒன்றிய செயலாளர் மு.கோவிந்தராசு
ஒகேனக்கல் பெரியார் சிலைக்கு: மாநில ப.க அமைப்பாளர் ந.அண்ணாதுரை
பாளையம் சமத்துவபுரம் தந்தை பெரியார் சிலைக்கு: மாவட்ட துணை செயலாளர் சி.காமராசு, நல்லம்பள்ளி ஒன்றிய தலைவர் மாத. செந்தில் குமார், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் தேவேந்திரன்.
பண்ட அள்ளி தந்தை பெரியார் சிலைக்கு:
மேனாள் மாவட்ட தலைவர் மு.பரமசிவம் தலைமையில்
எஸ்.கொட்டாவூர் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தல்: ப.க மாவட்ட செயலாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி
பழைய தருமபுரியில் தந்தை பெரியார் படத்திற்கு: மேனாள் மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராசு தலைமையில்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் தே.சத்தியராசு மாலை அணிவித்தல்.
இரங்கல் தீர்மானம்:
பென்னாகரம் கடமடை ப.க ஒன்றிய தலைவர் மு.சங்கரனின் தந்தையார் முனி மறைவிற்கும், தருமபுரி நகர இளைஞரணி தலைவர் மு.அர்ச்சுணன் தந்தையார் முனுசாமி மறைவிற்கும் இக்கூட்டம் தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.