தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்தநாளான 17.9.2024, செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை, தென்சென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.
காலை 10.00 மணிக்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் சென்னை – பெரியார் திடலிலுள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்து, அய்யா, அம்மா நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து கழகத்தினர் மரியாதை செலுத்துவர்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
– – – – –
சென்னையில் “பகுத்தறிவுப் பகலவன்”
தந்தை பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சிகள்
தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்தநாளான 17.9.2024, செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை, தென்சென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.
காலை 7.30 மணிக்கு வடசென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் பட்டாளத்தில் உள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
காலை 7.30 மணிக்கு சென்னை – தியாகராயர் நகரிலுள்ள பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.
காலை 8 மணிக்கு சென்னை – அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணியினர் மாலை அணிவிப்பர்.
காலை 7.30 மணிக்கு ஆலந்தூர் நகர மன்றம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தாம்பரம் மாவட்ட கழகத்தினர் மாலை அணிவிப்பர்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்