ஜப்பான், டோக்கியோ நகரில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நாளை (15.09.2024) நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க வந்த மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, ஆசிரியர் அவர்களை இன்று (14.9.2024) காலை தங்கும் விடுதியில் சந்தித்தார். நாளைய நிகழ்வில் ‘‘அண்ணா கண்ட கனவு’’ எனும் தலைப்பில் எம்.எம்.அப்துல்லா அவர்களும், ‘‘பெரியாரின் சமூகப் பார்வை’’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.
ஜப்பானில், தமிழர் தலைவர் ஆசிரியரை எம்.எம்.அப்துல்லா எம்.பி., சந்தித்தார்!

Leave a Comment