உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Viduthalai
1 Min Read

புதுடில்லி, செப்.12 உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்தநாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இம்முறையும் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. 2-ஆவது இடத்தில் ஜப்பான், 3-ஆவது இடத்தில்அமெரிக்கா, 4-ஆவது இடத்தில் கனடா, 5-ஆவது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன.

வாழ்க்கைத் தரம், தொழில் முனைவு, சாகசம், சுறுசுறுப்பு, பாரம்பரியம், கலாச்சார நோக்கம் உட்பட 10 தன்மைகளின் அடிப் படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
89 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 33-ஆவது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு பட்டியலில் இந்தியா 30-ஆவது இடத்தில் இருநதது. இந்நிலையில் தற்போது 3 இடங்கள் பின்னால் நகர்ந் துள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் 25 இடங்களில் அய்ரோப் பிய நாடுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆசியாவிலிருந்து ஜப்பான், சிங்கப்பூர், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளே முதல் 25 இடங்களில் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் அய்க்கிய அரபு அமீரகம் 17-ஆவது இடத்திலும் கத்தார் 25-ஆவது இடத்திலும் உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *