ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வாசிங்டன், செப்.11- கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா? என ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,
சிறப்பாக செயல்படும் மாநிலத்துக்கு நிதி தர மறுப்பதா?
கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங் களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது.
தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக திணிக்க முயற்சி?
மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழும் தமிழ்நாட்டுக்கு எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும் முயற்சியாக ஒன்றிய அரசு நிதி வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி ஒதுக்காததற்கு கண்டனம்
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்கு ஒன்றிய அரசின் நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை.
கல்வி மற்றும் சமத்துவத்தை ஒன்றிய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா? என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதை நாட்டு மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்