மும்பை, செப்.11- ராக்கெட் வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், புதிய வகை தங்கம் குறித்து ஒன்றிய அரசு முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
இந்திய கலாச்சார மரபுகளில் தங்கம் முக் கியத்துவம் வாய்ந்தது. பல தசாப்தங்களாக இந்தி யாவில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும், ஆண்டுகள் செல்ல செல்ல தங்கத்தின் தேவையும் அதிகரித்து வருவதுடன், விலையும் உயர்ந்து வருகிறது.
ஏழை, நடுத்தர மக்கள், பணக்காரர் என்ற பாகு பாடின்றி அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் ஒன்று தங்கம் என்றே சொல்லலாம்.
இந்தியாவை பொறுத்த வரையில், வீட்டில் எந்த சுபகாரியங்கள் நடந் தாலும் தங்கம் முக்கிய இடம் பெறும். இந்நிலையில், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில்கொண்டு ஒன்றிய அரசு முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது.
1960க்கு முன் துலாம் தங்கத்தின்(Tulam gold) விலை ரூ.113 மட்டுமே. அதன்பின் படிப்படியாக அதிகரித்து தற்போது ரூ.73 ஆயிரத்தை எட்டியுள்ளது. துலாம் என்பது பழம்கால தங்க அளவீடு. 11.6338 கிராம் தங்கம் என்பது ஒரு துலாம் ஆகும்.
ஆனாலும், பொது மக்கள் தங்கம் வாங்கும் ஆர்வத்தை மட்டும் குறைக்கவில்லை. இந்நிலை யில், ஒன்றிய அரசு முக்கிய ஆலோசனை செய்து வருகிறது.
பொதுவாக, தங்க நகைகள் 24 காரட், 22 காரட் மற்றும் 18 காரட்களில் உள்ளது. இந்நிலையில், 9 காரட் தங்கத்தை விரைவில் சந்தைக்கு கொண்டு வர ஒன்றிய அரசு திட் டமிட்டுள்ளது.
இது தொடர்பாக தங்க நகை வியாபாரிகளுடன் ஒன்றிய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வரு வதாக தகவல் வெளியாகி யுள்ளது.
24 காரட், 22 காரட் மற்றும் 18 காரட் உடன் ஒப்பிடும்போது 9 காரட் தங்கத்தின் விலை மிகவும் குறைவு என்றே சொல்ல லாம். தங்கத்தின் தரம் குறைவதால் 9 காரட் தங்கத்தின் விலை ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இருக்கும் என நிபுணர்கள் மதிப்பிட் டுள்ளனர்.
22 கேரட் தங்கம் என்பது சுத்தமான தங்கமாகும். 18 கேரட் 75 சதவீதம் சுத்தமான தங்கமும் 25 சதவீதம் மற்ற உலோகங்கள் கலந் திருக்கும். அதே 9 கேரட் தங்கத்தில் 37.5 சதவீதம் சுத்தமான தங்கமும் 62.5 சதவீதம் மற்ற உலோகங்கள் கலந்திருக்கும்.
இதற்கிடையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை தற்போதைய வரம்பில் இருந்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நிதி நிபுணர்கள் கூறுகின் றனர். இதனால் முதலீட்டா ளர்கள் தங்கத்தை வாங்க தயாராகி வருகின்றனர்.
இன்னும் சில மாதங் களில் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டும் என்ற எதிர் பார்ப்பும் எழுந்துள் ளது. இதனால் தங்க நகை பிரியர்களுடன், முதலீட் டாளர்களும் பெரிய அளவில் தங்கத்தை வாங்கி வருகின்றனர்.