சென்னை, செப். 11 தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான (2024-2025) வருடாந்திர நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.
அதில், இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் 220 ஆக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பணிச் சுமை கருதி வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் தற்போது 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
பள்ளிகளுக்கான குறைந்தபட்ச வேலை நாட்கள் 220 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கற்றல், கற்பித்தல், தேர்வுகள் உள்ளிட்ட பணிகளுக்கு 210 வேலை நாட்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் பயிற்சிக்கு 10 நாட்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரி யர்களும் திருத்தப்பட்ட நாள்காட்டியை பின்பற்றி செயல்படுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கனவு ஆசிரியர் திட்டம்
55 ஆசிரியர்கள் வெளிநாடு செல்லும் திட்டம்
சென்னை, செப்.11- கனவு ஆசிரியர் திட்டம்’ வாயிலாக 55 ஆசிரியர்கள் டென்மார்க், சுவீடன் நாடுகளுக்கு அரசின் முழுச் செலவில் இம்மாத இறுதிக்குள் சுற்றுலா அழைத்துசெல்லப் பட உள்ளனர்.
தனித்திறன் பெற்று விளங் கும் ஆசிரியர்களை அடையா ளம் கண்டு அவர்களுடைய தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘கனவு ஆசிரியர் திட்டம்’ அறிமுகப்ப டுத்தப்பட்டது. இந்த திட்டம் வாயிலாக கனவு ஆசிரியராக தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களை சேர்ந்த 380 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேர்ந் தெடுக்கப்பட்டவர்களில் 255 பேர் பெண் ஆசிரியர்கள் ஆவார்கள்.
380 பேர் தேர்வு செய்யப்பட் டதில், அவர்களில் 90 முதல் 100 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற்ற முதல் 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கும், 75 சதவீ தம் முதல் 89 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற்ற 325 ஆசி ரியர்கள் இந்தியாவுக்குள்ளும் சுற்றுலா அழைத்து செல்ல ஏற் பாடு செய்யப்படும் என தெரி விக்கப்பட்டு இருந்தது. இதில் 325 ஆசிரியர்கள் டேராடூனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் அழைத்து செல்லப்பட்டனர்.
வெளிநாடுகளுக்கு பயணம் எப்போது?
இதன் தொடர்ச்சியாக, கனவு ஆசிரியர்கள் பட்டியலில் முதல் 55 இடத்தை பெற்ற ஆசி ரியர்கள் கல்வி, கலை, தொழில் நுட்பம், பாரம்பரியம், கலாசா ரம் ஆகியவற்றில் சிறந்து விளங் கும் “நோர்டிக்” நாடுகளான டென்மார்க், பின்லாந்து அல் லது சுவீடன் அழைத்து செல் லப்பட உள்ளனர். கடந்த ஜூன் மாதம் சட்டமன்ற கோரிக்கை மீதான பதிலு ரையின்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா பமொழி, ஆகஸ்டு மாதத்துக்குள் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆசிரியர்களில் சில ருக்கு விசா பெறுவதில் சிக்கல் இருப்பதாலும், பயணம் மேற் கொள்ளக்கூடிய நாடுகளின் சீதோஷ்ண நிலை சரியில்லாத தாலும் பயணம் திட்டமிட்ட படி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மாதத்துக்குள் அவர் களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதற் கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நாளை காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம்
புதுடில்லி, செப்.11- காவிரி ஒழுங்காற்றுக்குழு இதற்கு முன்பு கடந்த மாதம் 13-ஆம் தேதி கூடியது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக மழை பெய்து வருவதால் தண்ணீர் விநியோகம் தொடர்பாக பிரச்சினைகள் இல்லாமல் இருக்கிறது.
ஆனால் மழை காரணமாக உபரியாக திறந்து விடப்படும் தண்ணீரை கணக்கில் கொள்ளக் கூடாது என மேலாண்மை ஆணையத்தின் கடந்த கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 102-ஆவது கூட்டம் நாளை (12.9.2024) நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கருநாடகம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.