ராகுல் காந்தி பதில்
ஹுஸ்டன், செப்.11 அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு பல தரப்பு மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான கருத்து தெரிவித்திருப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தவிர்க்க முடியாது என அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தொடர்ந்து வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாசிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இப்போது தடுத்து நிறுத்த முடியாத விஷயமாக மாறியுள்ளது.
இந்தியாவின் முக்கிய நிறுவன அமைப்பில்-பொருளாதாரம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய நிறுவன அமைப்புகளில், நம் நாட்டின் மக்கள்தொகையில் 90 சதவிகிதத்தினருக்கு அர்த்தமுள்ள விதத்தில் பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்கிற முக்கிய கேள்விக்கு விடை தெரிய வேண்டும். இதற்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவ காரம், நீதி மற்றும் நியாயம் தொடர் பான விவகாரம். பொருளாதார கணக்கெடுப்பு, நிறுவன அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய கணக்கெ டுப்புடன், விரிவான ஜாதி வாரிக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும். மாறாக வேறு எவ்வித கணக்கெடுப்புகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.