வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு: பரிசோதனையில் உறுதி!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, செப். 10- குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய இளைஞருக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட்-2 வகை குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது. இது தொடா்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய இளைஞருக்கு நோய்த்தொற்றின் அறிகுறிகள் தென்பட்டன. இதைத் தொடா்ந்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நோயாளியின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட்-2 வகை குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையை அறிவித்திருக்கக் காரணமான கிளேட்-1 வகை வைரஸ் பாதிப்பு இது இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சமடைய தேவை இல்லை.
அவரது உடல்நிலை தற்போது வரை சீராகவே இருந்து வருகிறது. தடிப்புகள் போன்ற தீவிரமான அறிகுறிகள் அவரது உடலில் இதுவரை தென்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை முதன்முதலில் 1958-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்தத் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வனப் பகுதிகளில் உள்ள குரங்குகளிடம் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்லாமல், வேறு கண்டங்களில் உள்ள நாடுகளிலும் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி 18 முதல் 44 வயதுடைய ஆண்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் குரங்கு அம்மை பரவலுக்கு முக்கிய காரணியாக பாலியல் தொடா்பு உள்ளது. எனவே, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மய்யங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு நோய்ப் பரவலை தடுக்க விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனை: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக சந்தேகிக்கப் படும் அனைத்து நபா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதுதொடா்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறைச் செயலா் அபூா்வா சந்திரா எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், பரவலைத் தடுக்கவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக சந்தேகிக்கப்படும் அனைத்து நபா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவா்களை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகள், தேவையான மருத்துவப் பணியாளா்கள் மற்றும் உபகரணங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.குரங்கு அம்மை பாதிப்பு, பரவல், பரிசோதனை மற்றும் உறுதிசெய்வது குறித்து ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் (அய்டிஎஸ்பி) மாநில மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார பணியாளா்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *