சென்னை, செப்.10- சென்னையில் காவல்துறையினர் தொடர் சோதனை வேட்டை நடத்தி வருவதால் கஞ்சா, குட்கா வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட் ராங் கொலை சம்பவத்துக்கு பின்னர், சென்னை காவல்துறை ஆணையராக பொறுப்பேற்ற அருண், ரவுடிகள் ஒழிப்பில் தீவிரம் காட்டினார். தற் போது அவர், போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக் கையில் தனது கவனத்தை திருப்பி உள்ளார்.
அதன்படி அவர், சென்னை உளவுப்பிரிவு காவல் துறையில் உதவி ஆணையர் தலைமையில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு என்று தனிப்பிரிவை தொடங்கி உள்ளார். இந்த பிரிவு கடந்த 7.9.2024 முதல் செயல்பட தொடங்கியது.
‘சென்னையை போதைப் பொருள் இல்லாத மாநகரமாக மாற்றி காட்டுவோம்’ என்ற சபதத்துடன் இந்த பிரிவு களத்தில் இறங்கி உள் ளது. போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை பட்டியல் எடுத்து ரகசிய சோதனை வேட்டையை மேற் கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்கள் வழக்கில் சிக்கியவர்களின் பட்டி யலை தயாரித்து, தற்போது என்ன செய்துக் கொண்டி ருக்கிறார்கள்? என்பதையும் கண்கா ணித்து வருகின்றனர். போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான இந்த நடவடிக் கையில் தனிப்பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட உள்ளனர்.
இதன் மூலம் கஞ்சா, குட்கா வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த சோதனையில் சிக்கும் கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள், கைது செய்யப்ப டுபவர்களின் விவரம் ஆகிய தகவல்களை வாரம் ஒருமுறை பத்திரிகை செய்திக் குறிப்பாக வெளியிட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.