வாசிங்டன், செப்.10 இந்திய கல்வி அமைப்பை ஆர்.எஸ்.எஸ்.கைப்பற்றி விட்டதாகவும், பெண்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பதே பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் விருப்பம் என்றும் அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே ராகுல் காந்தி பேசினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மூன்று நாள்கள் பயணமாக கடந்த 7.9.2024 அன்று இரவு அமெரிக்கா சென்றார்.
டெக்சாஸ் மாகாணம் டல்லஸ் நகரில் அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே அவர் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
இந்தியா என்பது ஒரே கருத்தியல் கொண்டது என்று ஆர். எஸ்.எஸ். நினைக்கிறது. ஆனால், பல்வேறு கருத்தி யல்கள் கொண்டது என்று நாங்கள் நினைக்கிறோம். நாட்டின் கல்வி அமைப்பை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி தனது கருத்தியலை புகுத்தி வருகிறது.
பெண்கள் அதிகம் பேசக்கூடாது, பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு எதிராக பாரதீய ஜனதாவும்,
ஆர்.எஸ்.எஸ்.சும் இருக்கின்றன. பெண்களை ஒரு குறிப்பிட்ட பாரம்பரிய துறைக்குள் கட்டுப்படுத்துவதே அவர்களது விருப்பம். அதாவது பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டும், அவர்கள் சமையல் மட்டுமே செய்யவேண்டும். அதிகம் பேசக்கூடாது என்பதே அவர்களது நோக்கம். ஆனால், பெண்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதை செய்ய வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
அமெரிக்காவை போலவே, ஜாதி, மத, மொழி வேறுபாடின்றி அனை வரும் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும். அனைவரும் கனவு காண அனுமதிக்கப்பட வேண்டும். என்று நாங்கள் நினைக்கிறோம். இந்திய அரசியலில் அன்பு, மரியாதை, பணிவு ஆகிய பண்புகளை புகுத்துவதுதான் எனது வேலை. இந்த பண்புகள் அரசியலில் இருந்தும், கட்சிகளில் இருந்தும் காணாமல் போய்விட்டன. ஒருகுறிப்பிட்ட மதம், ஜாதி, மாநிலம், மொழிசார்ந்த மக்களிடம் மட்டுமின்றி அனைத்து மனிதர்களிடமும் அன்பு இருக்க வேண்டும். மிகவும் வலி மையானவர் என்று பார்க்காமல், இந்தியாவை கட்டமைக்க முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் மரியாதை அளிக்கப்பட்ட வேண்டும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் நாங்கள் ஒரு விஷயத்தை சுவனித்தோம். பாரதீய ஜனதாவை பார்த்தோ, பிரதமரை பார்த்தோ யாரும் பயப்பட வில்லை. இவை பெரிய சாதனைகள்.
அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலையோ, எங்கள் மதம் மீதான தாக்குதலையோ, எங்கள் மாநிலங்கள் மீதான தாக்குதலையோ ஏற்க மாட்டோம் என்று மக்கள் உணர்த்தி விட்டனர்.
-இவ்வாறு ராகுல்காந்தி உரையாற்றி னார்.
மாணவர்களுடன் உரையாடல்
மேலும், டெக்சாஸ் பல்கலைக்கழ கத்தில் மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியிலும் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அதில் ராகுல் காந்தி கூறியதாவது:-இந்தியா, அமெரிக்கா மற்றும் இதர மேலைநாடுகள் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினையை சந்தித்து வருகின்றன. ஆனால் சீனாவில் அந்த பிரச்சினை இல்லை. ஏனென்றால், உலகளவில் உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அது போல், இந்தி யாவும் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்
உற்பத்தியில் ஈடுபட்டு, திறமைகளை மதிக்கத் தொடங்கினால், சீனாவை இந்தி யாவால் எதிர்கொள்ள முடியும். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதை ஏற்கெனவே செய்து காண்பித்துள்ளன. மராட்டிய மாநிலம் செய்து காண்பித்துள்ளது. ஆனால், உரிய ஒருங்கிணைப்புடன் இது செய்யப்படவில்லை.
-இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.