சென்னை,செப்.9- ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவை இயக்க திட்டமிட்டுள்ளது.
அதிகபட்சம் 50 பேர் பயணம் செய்யும் வகையில் 3 மணி நேரத்துக்கு மிகாமல் சுற்றுலா பயணிகள் கப்பலை இயக்க திட்டமிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கப்பலை இயக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம். பயணிகள் கப்பலை இயக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
இராமநாடு என்று அழைக்கப்படுகின்ற இராமநாதபுரம் மிகப் பழைமையான ஊர்களுள் ஒன்றாகும். இராமயண தொடர்பு காரணமாக புகழ் பெற்ற இராமநாதபுரம் மாவட்டம் சில முக்கிய சுற்றுலாத்தலங்கள் அமையப்பெற்றது. இராமேஸ்வரம், முனைவர் அப்துல் கலாம் அவர்கள் நினைவு மண்டபம், பாம்பன் பாலம், தேவிப்பட்டினம், திருப்புல்லாணி, திருஉத்திரகோசமங்கை மற்றும் ஏர்வாடி சுற்றுலா தலமாக உள்ளது.
இந்த சுற்றுலா தலத்தில் ஆண்டுக்கு லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தியில் சுற்றுலா பயணிகள் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விருப்பம் உள்ள நிறுவனங்கள் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கடல்சார் வாரியம் கூறியுள்ளது.