சென்னை, செப்.9- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதி நிறைவடைந்ததும், மறுநாள் ஆகஸ்ட் 1ஆம் தேதி டில்லி சென்றார். 4 நாட்கள், டில்லியில் தங்கியிருந்து சென்னை திரும்பினார்.
ஆனாலும் அவரது பதவி நீட்டிப்பு உத்தரவு டில்லியில் இருந்து வரவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 19ஆம் தேதி, 24ஆம் தேதி டில்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் ஆளுநர் ரவி 4ஆவது முறையாக நேற்று (8.9.2024) காலை 6.40 மணிக்கு திடீர் பயணமாக டில்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்த முறை ஒரு நாள் பயணமாக டில்லி செல்லும் ஆளுநர் ரவி, நேற்று (8.9.2024) இரவு 8.20 மணிக்கு அதே விமானத்தில் டில்லியில் இருந்து சென்னை திரும்பினார். ஆளுநர் ரவி தொடர்ந்து டில்லிக்கு பயணம் மேற் கொண்டது, தனது பதவி நீட்டிப்பு உத் தரவை பெறுவதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.
ஆனாலும், டில்லியில் இருந்து, ஆளுநரின் பதவி நீட்டிப்பு குறித்து, இதுவரையில் எந்தவிதமான தகவ லும் வரவில்லை. இதற்கிடையே தமிழ்நாட் டிற்கு புதிய ஆளுநரை நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரையில், ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக பதவியில் இருப்பார் என்று தெரிகிறது.