சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
புவனகிரி, செப்.9 கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் திருமுட்டம் பைந்தமி ழன் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணைத் தலைவர் மழவை கோவி. பெரியார் தாசன் தளபதி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் தென்னவன், மாவட்ட ப.க. தலைவர் கோ.நெடுமாறன், ஒன்றிய தலைவர் பெரியண்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை மாவட்டத்தில் உள்ள கிளைக் கழகங்களில் அனைத்து ஊர்களிலும் கழகக் கொடியேற்று நிகழ்ச்சி பெரியார் பட ஊர்வலம் எழுச்சியோடு நடைபெற வேண்டும் என்று பேசப்பட்டது.
நிகழ்ச்சியில் பெரியார் பட ஊர்வலம் சிதம்பரம் பெரியார் சிலையிலிருந்து காந்தி சிலை வரை படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மாலையில் கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தந்தை பெரியார் சிலை இருக்கும் சிதம்பரம் புவனகிரி தந்தை பெரியார் போக்குவரத்து கழக பணிமனை எதிரில் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய ஊர்களிலும், சிலை இல்லாத ஊர்களில் பொது மக்கள் பார்வைக்குத் தந்தை பெரியாரின் படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்படும் என்றும், மாலையில் சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு அழைத்துத் தோழர்கள் கட்சிகளையும் அழைத்து பொதுக்கூட்டத்தில் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
கூட்டத்தில் காட்டு மன்னார்குடியில் நகர தலை வர் பஞ்சநாதன், ஒன்றிய அமைப்பாளர் சண்முகசுந்தரம், அறந்தாங்கி செல்வ கணபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பஞ்சநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி சிலம்பரசன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ஜெயபால், வல சக்காடு வீரமணி திருமுட்டம், சிவபாண்டியன், கொழை ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.