மும்பை, செப்.9 ஃபிக்சட் டெபாசிட் என்பது குறிப்பிட்ட அளவு தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு வைப்பு செய்யும் சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை மியூச்சுவல் ஃபண்டுகளைப் போல அல்லாமல் அபாயங்கள் இன்றி பாதுகாப்பானதாக இருக்கும். மேலும் அதற்கு வட்டியும் வழங்கப்படும். இதனால் முதிர்வு காலத்தில் வட்டி வருமானத்தை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்ய நீங்கள் அருகில் உள்ள வங்கி அல்லது அஞ்சலகங்களில் முதலீடு செய்யலாம்.
வங்கிசாரா நிதி நிறுவனங்களிலும் தற்போது பிக்சட் டெபாசிட்கள் வழங்கப்படுகின்றன. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வெவ்வேறு காலகட்டத்துடன் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் உங்களுக்கு ஏற்ற திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து லாபம் பெறலாம். 1 ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு சிறந்த வட்டி வழங்கும் முன்னணி வங்கிகளின் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஸ்மால் பைனான்ஸ் பேங்குகளில் 1 வருட பிக்சட் டெபாசிட் களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள்:
AU ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 7.25 சதவீதம்
எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 8.2 சதவீதம்
ESAF ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 6 சதவீதம்
ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 8.25 சதவீதம்
நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 7 சதவீதம்
சூர்யோதாய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 6.85 சதவீதம்
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 8.25 சதவீதம்
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 7.85 சதவீதம்
உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 8 சதவீதம்
தனியார் துறை வங்கிகளில் 1 ஆண்டு பிக்சட்
டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள்:
ஆக்சிஸ் பேங்க்: 6.7 சதவீதம்
பந்தன் பேங்க்: 7.25 சதவீதம்
சிட்டி யூனியன் பேங்க்: 7 சதவீதம்
சிஎஸ்பி பேங்க்: 5 சதவீதம்
டிபிஎஸ் பேங்க்: 7 சதவீதம்
DCB பேங்க்: 7.1 சதவீதம்
பெடரல் பேங்க்: 6.8 சதவீதம்
HDFC பேங்க்: 6.6 சதவீதம்
அய்சிஅய்சிஅய் பேங்க்: 6.7 சதவீதம்
IDFC ஃபர்ஸ்ட் பேங்க்: 6.5 சதவீதம்
IndusInd பேங்க்: 7.75 சதவீதம்
ஜம்மு & காஷ்மீர் பேங்க்: 7 சதவீதம்
கரூர் வைஸ்யா பேங்க்: 7 சதவீதம்
கர்நாடக பேங்க்: 7.1 சதவீதம்
கோடக் மஹிந்திரா பேங்க்: 7.1 சதவீதம்
RBL பேங்க்: 7.5 சதவீதம்
எஸ்பிஎம் பேங்க் இந்தியா: 7.05 சதவீதம்
சவுத் இந்தியன் பேங்க்: 6.7 சதவீதம்
தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க்: 7 சதவீதம்
YES பேங்க்: 7.25 சதவீதம்
பொதுத்துறை வங்கிகளில் 1 ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள்:
பேங்க் ஆஃப் பரோடா: 6.85 சதவீதம்
பேங்க் ஆஃப் இந்தியா: 6.8 சதவீதம்
மகாராஷ்டிரா பேங்க்: 6.75 சதவீதம்
கனரா பேங்க்: 6.85 சதவீதம்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா: 6.85 சதவீதம்
இந்தியன் பேங்க்: 6.1 சதவீதம்
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்: 6.9 சதவீதம்
பஞ்சாப் நேஷனல் பேங்க்: 6.8 சதவீதம்
பஞ்சாப் & சிந்து பேங்க் 6.3 சதவீதம்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: 6.8 சதவீதம்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: 6.8 சதவீதம்