திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாட்டி-தாத்தா நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் துவக்கமாக தமிழ் வாழ்த்து முடிந்து எல்.கே.ஜி மாணவர்களின் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
பாட்டி தாத்தா–வாக மாறிவந்த குழந்தைகளின் அணிவகுப்பை தொடர்ந்து எல்.கே.ஜி, யூ.கே.ஜி மற்றும் பிரி.கே.ஜி மாணவ மாணவிகளின் நடனம் மற்றும் பாடல் ஆகியவற்றை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். மாணவர்கள் பழைய பாடலுக்கு ஆடியும் பாடியும் அனைத்து தாத்தா பாட்டிகளையும் மகிழ்வித்தனர். நிகழ்வின் முக்கிய நிகழ்வாக தாத்தா-பாட்டிகள் தங்கள் பேரக் குழந்தைகளுடன் ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சி நாட்டுப்பண்ணுடன் இனிதே முடிவடைந்தது.