உச்சநீதிமன்றம்
புதுடில்லி, செப்.8 ‘உயா் நீதிமன்றங்களுக்கான நீதி பதிகள் நியமனம் என்பது தனிநபரின் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், உரிய பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயா்வுக்கான பட்டியலை மறுபரிசீலனை செய்து அனுப்பு மாறு இமாசலப்பிரதேச உயா் நீதிமன்ற கொலீஜியத்துக்கு உத்தர விட்டது.
உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்வு அளிக்க இருவ ரின் பெயா்களை இமாசலப் பிரதேச உயா்நீதிமன்ற கொலீ ஜியம் கடந்த மார்ச் 6-ஆம் தேதி பரிந்துரை செய்தது. இதற்கு மூத்த மாவட்ட நீதிபதிகளான சிராக் பானு சிங், அரவிந்த மல்ஹோத்ரா ஆகியோர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
தங்களின் பணி மூப்பை உயா்நீதிமன்ற கொலீஜியம் கருத்தில் கொள் ளவில்லை என புகார் தெரிவித்து, அதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகி யோர் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘உயா்நீதிமன்ற நீபதிகளாக பதவி உயா்வு அளிக்க சமா்ப்பிக்கப்பட்ட பரிந்துரை தொடா்பாக உயா்நீதிமன்ற கொலீஜியத்தில் ஒருங்கிணைந்த ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தனி நபரின் முடிவின் அடிப்படையில் இந்தப் பரிந்துரை செய் யப்பட்டிருக்கிறது. நடை முறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. உயா்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம் என்பது தனிநபரின் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல. கொலீஜியத்தில் உள்ள அனைத்து உறுப்பினா் களுடனும் கலந்தாலோசித்து இதற்கான பரிந்துரை செய் யப்பட வேண்டும்.
மனுதாரா்கள் இருவரின் பெயா்களும் ஏற்கெனவே, கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி உயா்நீதி மன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், உச்ச நீதிமன்ற கொலீஜியம் இவா்களின் பெயா்களைப் பரிசீலிக்க கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை
12-ஆம் தேதி மறுத்துவிட்டது. இருந்த போதும், அவா்களின் பெயா்களை மறுபரிசீலனை செய்ய கடந்த ஜனவரி 4-ஆம் தேதி உயா்நீதிமன்ற கொலீஜி யத்தை உச்சநீதிமன்ற கொலீஜியம் அறிவுறுத்தியது. மேலும், மாநில ஒதுக்கீட்டின் கீழ் இவா்களின் பெயா்களை பரிசீலனை செய்யலாம் என்ற ஒன்றிய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் பரிந்துரையையும் உச்சநீதிமன் றம் சுட்டிக்காட்டியது.
எனவே, உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு சிராக் பானு சிங், அரவிந்த மல்ஹோத்ரா ஆகியோரின் பெயா்களை பரிந்துரைப்பது குறித்து உயா்நீதிமன்ற கொலீஜியம் மறுபரிசீலனை செய்யவேண்டும்’ என்று உத்தர விட்டனா்.