பட்டுக்கோட்டை, நவ. 17- பட்டுக்கோட்டை கழக மாவட்ட அமைப்பாளர் வளபிரம்மன்காடு சோம. நீலகண்டன், சோம. கண்ணன் ஆகியோரது தந்தையார் சோமசுந்தரம் அவர்களுடைய வாழ்விணையர் மீனாகுமாரி நேற்று (16-11-2023) இரவு 6 மணி அளவில் மறை வுற்றார்.
விழிகளும் கொடையாக வழங்கப்பட்டன. இன்று (17-11-2023) மதியம் 2 மணி அளவில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை வழங்கப்பட் டது.
பேராவூரணி வளப் பிரமன்காடு அவர்களின் இல்லத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் பெ.வீரையன், மாவட்ட செயலாளர் பேராவூரணி சிதம்பரம், அறந்தாங்கி மாவட்ட தலைவர் மாரி முத்து, பொதுக்குழு உறுப் பினர் இரா.நீலகண்டன், மாவட்ட ப.க தலைவர் ரத்தினசபாபதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றி குமார், பொதுக்குழு உறுப் பினர் அரு.நல்லதம்பி, பட்டுக்கோட்டை நகர தலைவர் வை.சேகர், மாவட்ட ப.க. செயலாளர் இரா காமராஜ் உள் ளிட்ட கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள், உற வினர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பெருந்திரளாக வருகை தந்து மறைந்த அம்மை யாருக்கு இறுதி மரி யாதை செலுத்தினர்.
செய்தியறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் சோம. நீலகண்டன் அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறுதலை யும் தெரிவித்தார்.