ஒசூர் உள்வட்ட சாலை தந்தை பெரியார் சதுக்கம் பகுதியில் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யசிறீ சிவன் அவர்களுக்கு பகுதி குடியிருப்பு நலச்சங்கங்கள் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தந்தை பெரியார் நூல்களை வழங்கி பயனாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் என்.எஸ்.மாதேஸ்வரன், தேவி மாதேஷ், காங்கிரஸ் மாநகர தலைவர் சி.தியகராஜன், கழக மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி, பகுத்தறிவு கலைத்துறை மாவட்ட அமைப்பாளர் மனோகரன், வழக்குரைஞர்கள் ரூபன்,க.கா.வெற்றி, தந்தை பெரியார் சதுக்கம் பகுதியில் சுற்றியுள்ள குடியிருப்பு நலச்சங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யசிறீ சிவன் அவர்களுக்கு பகுதி குடியிருப்பு நலச்சங்கங்கள் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு
Leave a Comment