முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகநூல் சமூக ஊடகப் பதிவில் அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லா தானியங்கி காரில் செல்லும் காட்சிப்பதிவை இணைத்து ‘இனி வரும் உலகம்’ நூலில் உள்ள தந்தை பெரியாரின் கூற்றைப் பதிவு செய்துள்ளார்.
‘‘இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர் களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகி யவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை!’’
– தந்தை பெரியார் (‘இனி வரும் உலகம்’)