செவிலியர்களும், ஆசிரியர்களும் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பித்த அவலம்
சண்டிகர், செப்.5 அரியானாவில் நிலவும் வேலைவாய்ப்பு இன்மையால், 2024 ஆகஸ்ட் 22 முதல் தற்போதுவரை 60,000 பட்டதாரிகள் மற்றும் 6,112 முதுகலை பட்டதாரிகள் துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இது தொடர்பாக கவுஷல் ரோஸ்கர் நிகம் (HKRN) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப் படையில் துப்புரவு பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர், என்று மாநில அரசு புள்ளி விவரம் வெளி யிட்டுள்ளது.
அரியானா கவுஷல் ரோஸ்கர் நிகம் என்பது அரியானா இளை ஞர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைகளை வழங்கும் மாநில அரசு அமைப்பாகும். ஆகஸ்ட் மூன்றாம் வாரம் முதல் செப்டம்பர் 2, 2024 வரை, 60,000 பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் அரியானா கவுஷல் ரோஸ்கர் நிகம்-மில் துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த பணிக்கு மாத ஊதியம் சுமார் ரூ. 8000 முதல் 12 ஆயிரம் வரை 12 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றினால் வழங்கப்படும். மேலும், அரியானா மாநில அரசு அமைப்பின் தரவுகளின்படி, 12-ஆம் வகுப்பு வரை முடித்த 1 லட்சத்து 17 ஆயிரத்து 144 பேர்கள் இந்த துப்புரவு வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அரியானாவில் அரியானா கவுஷல் ரோஸ்கர் நிகம் மூலம் அரசு துறைகள், வாரியங்கள் மற்றும் பெருநிறுவனங்களில் பணியமர்த்தப்படும்.
முதுகலை பட்டதாரிகளின் பரிதாபம்!
ஒருவேளை, பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் பணி விவரம் தெரியாமல் தவறுதலாக விண்ணப்பித்துவிட்டார்களா என்று கருதவும் இடமில்லை. ஏனென்றால், வேலை விவரம் பொறுப்புகள் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அதனால், தவறுதலாகப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு சாத்திய மில்லை என்று அதிகாரிகள் குறிப் பிட்டுள்ளனர். பொது இடங்கள், சாலைகள் மற்றும் கட்டடங்களில் இருந்து குப்பைகளை சுத்தம் செய்தல், பெருக்குதல் மற்றும் அகற்றுதல் ஆகிய வேலைகள் என்று விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, விண்ணப்பதா ரர்கள் வேலை விவரத்தை, படித்ததை உறுதிப்படுத்தும் உறுதி மொழியை சமர்ப்பிக்க வேண்டும். அவர்களின் சொந்த மாவட்டத்தில் மட்டுமே பணிய மர்த்தப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திப்படி, துப்புரவுப் பணியா ளர்கள் பதவிக்கு இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்ட தாரிகள் விண்ணப்பித்துள்ளதற்குக் கார ணம் அரியான மாநிலத்தில் நீண்ட காலமாக நிலவும் வேலையின்மை பிரச்சினையாகும். சிலர் அரசாங்க வேலை என்ற பதவியில் ஈர்க்கப் பட்டாலும், மற்றவர்கள் வேறு வேலை கிடைக்காததால் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது.
“வேலை இல்லை. கூலி வேலைக்குச் சென்றாலும் வாரம் ரூ.800 ஊதியம் தருகிறார்கள் ஆகையால் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்தேன்” என்று சிர்சாவைச் சேர்ந்த 29 வயதான ரச்சனா தேவி கூறினார். ஆசிரியர் பயிற்சியில் பட்டம் பெற்ற அவர், இப்போது ராஜஸ்தானில் வரலாற்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். ரச்சனா தேவி 4 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருந்ததாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது. அதே போல, சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் வசிக் கும் செவிலியருக்கு படித்த மனிஷா மற்றும் பி.எட்., பட்டம் பெற்ற அவரது கணவர் டேனிஷ் குமார் (31), தாங்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும், ஒப்பந்தத் தொழிலா ளர்களாக வேலை செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினர்.
வேலையில்லாதார்
எண்ணிக்கை 11.3% உயர்வு
அரியானாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலமுறை தொழி லாளர் படை கணக்கெடுப்பு வெளி யிட்ட தரவு அரியானாவில் வேலை யின்மை நெருக்கடியையும் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.
அரியானாவின் நகர்ப்புறங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட வேலையில்லாதவர்கள் எண் ணிக்கை 2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 11.2% ஆக அதிகரித்துள்ளது. இது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் 9.5% ஆக இருந்தது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
10 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. ஒட்டு மொத்த மாநிலத்தையும் மதவெறியூட்டிவிட்டது பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அடியாட்களாக சேர்ந்து இஸ்லாமி யர்களைகொலை செய்வதே முக்கிய வேலையாக கருதுகின்றனர். ஒருபுறம் மதவெறியூட்டப்பட்டவர்கள் மறுபுறம் தேசபக்தி என்ற பெயரில் அரசை விமர்சிப்பவர்களை தாக்கும் நடவடிக்கையும் தொடர்வதால் அங்கு அரசுக்கு எதிராக பேசுவதற்கு யாருமே தயாராக இல்லாததால் வேலை வாய்ப்பு இதர வாழ்வாதார தேவைகளைக் கூட கேட்க நாதியில்லாமல் போய்விட்டனர்.
இந்த நிலையில் அரியானாவில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.