‘நெக்ஸ்ட்’ தேர்வு குறித்து தேசிய மருத்துவ ஆணையம் தகவல்

1 Min Read

சென்னை, செப்.4- இந்தாண்டு முதல், ‘நெக்ஸ்ட்’ தேர்வு நடத்தப்பட உள்ளதாக, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிக்க, ‘நீட்’ தேர்வு கட்டாயம். அதே போல, இளநிலை மருத்துவம் முடித்த பின், முதுநிலை மருத்துவம் படிக்க வேண் டும் எனில், அதற்கான நீட் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்தியாவில் சேவையாற்ற வருவோர், அதற்காக நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில், பயிற்சி மருத்துவர் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாட்டு மருத்துவ படிப்பை முடித்தோருக்கான தகுதி தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘நெக்ஸ்ட்’ என்ற தேசிய தகுதி தேர்வை, இரண்டு கட்டங்களாக நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி, எம்.பி.பி.எஸ்., இறுதி யாண்டு மாணவர்கள், நெக்ஸ்ட் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பயிற்சி மருத்துவராக முடியும். பின், நெக்ஸ்ட் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவைகளிலும் ஈடுபடவும் முடியும்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த வர்களும், இந்தியாவில் மருத்துவம் பார்க்க, நெக்ஸ்ட் 2 தேர்வு எழுதுவது கட்டாயம். கடந்த கல்வியாண்டில், இத்தேர்வை அறிமுகப்படுத்த திட்டமிடப் பட்ட நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டில் அதை அமல்படுத்த, தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்ਸ0து, அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *