புதுடில்லி, செப்.4 ஜார்க்கண்ட் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை டில்லியில் நேற்று (3.9.2024) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஜார்க்கண்ட் மேனாள் முதலமைச்சரும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பயி சோரன் தனது ஏராளமான ஆதரவாளா்களுடன் பாஜகவில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி இணைந்தார். அவரைத் தொடா்ந்து, ஜேஎம்எம் கட்சியின் மேலும் சில நிர்வாகிகளும் பாஜகவில் இணைந் தனா்.
இந்தச் சூழலில், கார்கே மற்றும் ராகுலை டில்லியில் உள்ள கார்கே இல்லத்தில் ஹேமந்த் சோரன் சந்தித்து ஆலோசனை மேற் கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், சோரனின் மனைவியும் சட்டமன்ற உறுப்பினரமான கல்பனா சோரன் ஆகியோர் உடனிருந்தனா்.
‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்று சோரன் குறிப்பிட்ட போதும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ் தல் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோ சனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் சம்பயி சோரன் பழங்குடியினா் வாக்குகளை கணிசமாகப் பிரிக்க வாய்ப்புள்ளதால், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து தனது முகநூல் பக்கத்தில் ராகுல் வெளி யிட்ட பதிவில், ‘ஜார்க்கண்ட் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் ‘இந்தியா’ கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. மாநிலத்தில் நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் இந்தக் கூட் டணி மிகப்பெரிய வெற்றி பெறும்’ என்று குறிப்பிட்டார்.