பாரீஸ், செப். 3- பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை யான ஜோடி கிரின்ஹாம், பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை கிரின்ஹாம் பாராலிம்பிக் தொடரில் படைத்துள்ளார்.
7 மாத கர்ப்பிணியான அவர், டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்த போயிபி பீட்டர்சனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். பிரிட்டனைச் சேர்ந்த வில் வித்தை வீராங்கனை ஜோடி கிரின்ஹாம். 31 வயதாகும் 7 மாத கர்ப்பிணியான இவர், பாரீஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டியில் பிரிட்டன் சார்பில் பங்கேற்றார்.
1.9.2024 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அதே நாட்டைச் சேர்ந்த போயிபி பீட்டர்சனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் விளையாட்டுத் துறையில் பங்கேற்று பதக்கம் வென்ற 7 மாத கர்ப்பிணி என்ற பெருமையை கிரின்ஹாம் பெற்றுள்ளார்.
பதக்கம் வென்றது குறித்து பேசிய ஜோடி கிரின்ஹாம், தன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஜூலை மாதம் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில், எகிப்திய வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ், 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் பதக்கம் ஏதும் வெல்லவில்லை.