பட்னா, செப். 3- பீகாரில் ஆளும் அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜேடியு) தேசிய செய் தித் தொடா்பாளா்
கே.சி.தியாகி பதவி விலகினார்.
அய்க்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி யிலிருக்கும் பாஜகவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பல்வேறு விடயங்களில் கருத்துகளைக் கூறிவந்த தியாகி, தற்போது செய்தித் தொடா்பாளா் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதுதொடா்பாக அய்க்கிய ஜனதா தளம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளராக இருந்த கே.சி.தியாகி பதவி விலகியுள்ளார்
இதையடுத்து, புதிய தேசிய செய்தித் தொடா் பாளராக ராஜீவ் ரஞ்சன் பிரசாத்தை பீகார் முதலமைச்சரும், கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் நியமித் துள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம், வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதா, உயா் ஒன்றிய அரசுப் பணிகளில் நேரடி நியமனம், இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினை போன்ற விடயங்களில் ஒன்றிய பாஜக அரசின் கொள்கை நிலைப் பாட்டுக்கு மாற்றாக அய்க்கிய ஜனதா தளத்தின் சார்பில் தியாகி முன் வைக்கும் கருத்துகள் கவனத்தை ஈா்த்துள்ளன.
பாஜகவுடன் கூட்டணி உறவில் இவரது கருத்துகள் விரிசலை ஏற்படுத்துவதாக அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் ஒரு பிரிவினா் அதிருப்தியில் இருந்தனா்.
எனினும், கடந்த மாதம் 23-ஆம் தேதி கட் சியின் அமைப்புப் பதவிகளில் நிர்வாகிகளை நியமித்த அய்க்கிய ஜனதா தள தலைமை, தேசிய செய்தித் தொடா்பாளா் மற்றும் அரசியல் ஆலோசகா் பொறுப்பில்
கே.சி.தியாகியை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.