இவர்களெல்லாம் பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்க வேண்டாம்!! ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்!!

viduthalai
1 Min Read

புதுடில்லி, செப். 2- பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைப்பது குறித்து ஒன்றிய அரசு புதிய அறிவிப்பை வெளியிட் டுள்ளது.

ஒன்றிய அரசானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் கார்டுடன் ஆதார் அட்டை கட்டா யம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல் படுத்தியது. மேற்கொண்டு இணைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால் ஒவ்வொரு முறை கால அவகாசம் நீட்டித்தும் குறிப்பிட்ட சிலர் இணைக்காமலே இருந்து வருகின்றனர். இதனை திருத்தும் விதமாக தற்பொழுது புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், இனி ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைக்க தேவையில்லை. அதாவது ஜூலை மாதம் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு பான் அட்டை பெற்றவர்கள் யாரும் இணைக்கத் தேவை யில்லை.

அவர்கள் பான் அட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை கொடுத்திருக்கும் பட்சத்தில் தானாகவே இணைக்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல இனி வரும் நாட்களிலும் ஆதார் அட்டை கொடுத்து பான் கார்டு பெறுபவர்களுக்கும் இந்த விதிமுறை செல்லுபடி ஆகும் எனக் கூறியுள்ளனர்.

இதனை தவிர்த்து 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் முன் விண்ணப்பித்தவர்கள் கட் டாயம் ஆதார் அட்டை கொடுத்து இணைத்துக் கொள்ள வேண்டும்.

மாறாக 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து விண்ணப்பித்தவர்கள் தனித்தனியே இணைக்க அவசியம் இல்லை. இந்த அறிவிப்பானது தற்பொழுது மக்களுக்கு மகிழ்ச்சி கரமானதாக உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *