2.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோவில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பாஜக அரசில் இளைஞர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் – ஜம்மு இளைஞர்கள் பாஜகவை தோற்கடிப்பார்கள்: காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உறுதி
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குற்றவாளிகளுக்கு பாஜக அரசு சுதந்திரம் அளித்து உள்ளது: “சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன, ஒன்றிய அரசு இயந்திரம் வாய் மூடிப் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருக்கிறது,” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மாவட்ட நீதிமன்றங்கள் 30 சதவீத நீதித்துறை அதிகாரிகளுடன் பணிபுரிகின்றன.காலிப் பணியிடங்களை நிரப்பவும் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும் அகில இந்திய நீதித்துறை சேவை தேவை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து.
* அடுத்த இரண்டு மாதங்களில் மகாராட்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் – அதுவரை ஓய மாட்டேன்: சரத்பவார் சபதம்.
* முகலாயப் பேரரசர் அக்பரை புகழ்ந்துரைக்கும் புத்தகங்களை எரிப்பேன், ராஜஸ்தான் கல்வி அமைச்சர் பேச்சு.
* விரைவான நீதிக்கு ஒத்திவைப்பு கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் – நீதித்துறைக்கு குடியரசுத் தலைவர் முர்மு வேண்டுகோள்
* இந்திய மருத்துவ கவுன்சில் தலைமை புரவலராக கேத்தன் தேசாய் நியமனம். 2010இல் ஊழல் வழக்கில் சிக்கியவரை புரவலராக்குவதா? அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு.
– குடந்தை கருணா