புதுடில்லி, செப். 2- பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் ‘திவ்யா மஞ்சன்’ தயாரிப்பில் மீனில் இருந்து பிரிக்கப்படும் சாறு கலக்கப்படுகிறது.
ஆனால், அதனை ஆயுர்வேத தயாரிப்பு எனக்கூறி ஏமாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து இழப் பீடு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் பாபா ராம்தேவுக்கு டில்லி உயர்நீதி மன்றம் தாக்கீது வழங்கி உள்ளது.
பதஞ்சலி எனும் நிறுவனம் ஆயுர்வேத தயாரிப்புகளை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை பாபா ராம்தேவ் நடத்தி வருகிறார்.
இந்த பதஞ்சலி நிறுவனம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. சமீபத்தில் கூட விளம் பரத்தில் தவறான தகவல்களை அளித்து பதஞ்சலி தயாரிப்புகளை பிரபலப்படுத்தியாக தொடரப் பட்ட வழக்கில் பாபா ராம்தேவ் மன்னிப்புக் கோரினார்.
ஆங்கில மருத்துவம் மீது சந்தேகம் கிளப்பும் வகையிலும், குணப்படுத்தவே முடியாத நாள் பட்ட நோய், மரபணு நோய்களை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்றும் விளம்பரத்தில் கூறியது தொடர்பாக உச்சநீதிமன்றம் பாபா ராம்தேவை கடுமையாக கண்டித்தது.
அதன்பிறகு ஆங்கில மருத் துவம் பற்றி அவதூறாக விளம்பரம் வெளியிட்ட சர்ச்சைக்கு நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினார். இதன் தொடர்ச்சியாக தற்போது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இன்னொரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது டில்லி உயர்நீதிமன்றத்தில் பதஞ்சலி தயாரிப்புக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் உண்மையில் ‘திவ்ய மஞ்சன்’ தயாரிப்பில் மீனில் இருந்து பிரித்து எடுக்கப்படும் சாமுத்ரபீன் (Sepia Officinalis) சேர்க்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி விசா ரிக்க வேண்டும். இதனை ‘யூடியூப் வீடியோவில்’ பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலலத் துறை, உணவு பாதுகாப்பு துறை, ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, ஆயுஷ் அமைச்சகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதனால் நீதித்துறை தலையிட்டு எங்களுக்கு இழப்பீடு பெற்று கொடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பான மனு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர் யதீன் சர்மா வாதாடுகையில், “இப்படியான தவறான தகவல்களுடன் பொருள் விற்பனை செய்வது என்பது மருந்து மற்றும் காஸ்மெட்டிக்ஸ் சட்டத்தை மீறுவதாகும்.
மேலும் தற்போது வெளியான இந்த தகவல் எங்களை மிகவும் காயப்படுத்துகிறது. ஏனென்றால் எங்களின் மத நம்பிக்கையின்படி நாங்கள் அசைவம் வகை யில் இருந்து வருவதை பயன்படுத்த மாட்டோம்’’ என வாதிட்டார்.
இதனை கேட்ட டில்லி உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவுக்கு தாக்கீது அனுப்பி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.